அமெரிக்க தடை நீக்கப்படவேண்டும்!



 அமெரிக்காவின் நியாயமற்ற தடைகள் உடனயடியாக நீக்கப்பட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், ஜனநாயகம் என்ற பெயரில் அமெரிக்கா தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாகவும், சீனா தெரிவித்துள்ளது. 

மேலும், காலநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகளில் ஒன்றிணைந்து செயற்பட அமெரிக்கா முன்வர வேண்டும் எனவும் சீனா குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்கா எதிர்கொண்டுள்ள முக்கிய சவால்களில் சீனாவுடனான வளர்ந்துவரும் போட்டி முக்கியமானதாகக் காணப்படுவதாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அண்மையில் தெரிவித்திருந்தார்.


எனினும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும், அவதூறுகளையும் தாம் ஒருபோதும் ஏற்கப் போவதில்லை என சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments