ஜெனீவா முடிந்தது:54 இந்திய மீனவர் கைது!


வட பகுதி கடற்பரப்பில் எல்லைமீறி தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  கடற்படையினரால்  54 தமிழக மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது மன்னார் கடற்பரப்பில் 2 இழுவைப் படகுகளுடன் 20 மீனவர்களும்,முல்லைத்தீவு கடற்பரப்பில் 2 இழுவைப் படகுகளுடன் 20 மீனவர்களும்,யாழ். மாவட்டம் நெடுந்தீவு கடற்பரப்பில் ஒரு  இழுவைப் படகுடன்  14 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனைத்து மீனவர்களும் கொவிட் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய தனிமைப் படுத்தலின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

No comments