தாமரைப்பூவால் போனது உயிர்!!


மரண வீட்டிற்கு சென்று திரும்பிய இளைஞன் குளமொன்றில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற போது குளத்தின் சேற்றில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

ஏறாவூர் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட களுவாங்கேணி-02 பிரதான வீதியைச் சேர்ந்த 21 வதுடைய மகேந்திரன் கஜேந்திரன் என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை (19) அதிகாலை தனது உறவினரின் மரண வீடோன்றிக்கு சென்று தனது வீட்டுக்கு திரும்பிச் செல்லும் போது தாமரைக்குளத்தில் உள்ள தாமரைப்பூவினை ஆய்வதற்கு குளத்தில் இறங்கி சென்றபோது குளத்தினுள் உள்ள சேற்றில் புதையுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

ஏறாவூர் நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் சடலத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். 

சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments