சித்த வைத்திய பட்டதாரிகள் போராட்டம்!

அனைத்து வேலையற்ற சித்த வைத்திய பட்டதாரிகளுக்கும் உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க கோரி யாழ்ப்பாணம் – கைதடி சித்த வைத்திய பீட

வளாகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இன்று (16) முன்னெடுக்கப்பட்டது.

சித்த வைத்தியப் பீட பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு சம்பந்தமான திட்டங்களில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் அரசும் பாராமுகமாக உள்ளதனால், தங்களின் முதுநிலை பட்டதாரிகளின் இன்றைய அவலநிலை, தற்போதைய பயிலுனர் மாணவர்களின் எதிர்காலநிலை குறித்த அச்சம், வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறுமோ என்ற பயம், இவற்றையெல்லாம் முன்னிறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்று போராட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் குறைந்த கால பட்டப்படிப்பினை நிறைவு செய்யும் சகல துறையினருக்கும் வேலைவாய்ப்பு ஒழுங்குகளை சம்பந்தப்பட்ட அமைச்சும், அரசும் உறுதி செய்யும் நிலையில் 6 வருட கால பயிற்சியினை நிறைவு செய்யும் எமக்கு அதற்கான தீர்வினை இதுவரை நிர்ணயிக்காமல் உள்ளது யாரின் தவறு என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

No comments