தனியாருக்கு கொரோனா தடுப்பூசி!


திரிபடைந்த கொரோனா வைரஸ் தாக்கம் இலங்கையில் உச்சமடைந்துவருகின்றநிலையில் கடந்த ஜனவரி மாத இறுதி வாரம் முதல் அரசாங்க சுகாதாரத்துறையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் முதற்கட்ட கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.  தற்போது பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான முன்னாயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. 

இதனிடையே வடமாகாணத்தில் இரண்டாவது கட்டமாக தனியார் சுகாதாரத் துறையில் கடமையாற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள், பல் வைத்தியர்கள், பதிவு வைத்திய அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இதற்கு மேலதிகமாக மேற்குறிப்பிட்ட உத்தியோகத்தர்களில் ஓய்வு பெற்றவர்களுக்கும் இத்தடுப்பூசியானது வழங்கப்படவுள்ளது.


No comments