தேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு !


சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.

சென்னை மேற்கு தாம்பரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சுமார் 8 ஆயிரம் பேர் வருவார்கள் என்று கமல்ஹாசன் எதிர்பார்த்த நிலையில் 3 ஆயிரம் பேர் மட்டுமே வந்திருந்தனர்.

அதனாலேயே கமல்ஹாசன் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் கமல்ஹாசன் தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்து ஒரு புறம் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் மறுபுறம் தொண்டர்கள் தூங்கி வழிந்தும், சென்போனை பார்த்துக் கொண்டும் இருந்தனர்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரவாகி வருகின்றன.இந்நிலையில் வரும் மாதம் 7ஆம் தேதி மக்கள் நீதி மய்யத்தின் மாநாடு நடைபெற உள்ளது. அப்போது நிலை எப்படி இருக்கப் போகிறது என்பதை நினைத்து இப்போதே கவலைப்பட தொடங்கிவிட்டனர் கட்சி நிர்வாகிகள்.


 இதன் தொடர்ச்சியாகத்தான் மாநாடு முடிந்து உடகாவியளார்களை சந்தித்த கமல் கூட்டணி குறித்தும் பேசியுள்ளார், அதில் முன்றாவது அணி அமைப்பதாயின் தனது தலைமை ஏற்று சீமான் , மற்றும் சரத்குமார் போன்றவர்கள் இணையலாம் என்று சொன்னார் பின்பு திமுக கூட்டணியில் இணைவது குறித்து கேட்டபோது , தமக்கு தூதுகள் மட்டுமே வந்ததாகவும் , தலைமையில் இருந்து தனக்கு அழைப்பு வரவில்லை என்றும் அப்படி வந்தால முடிவெடுக்கலாம் என்று கூறியுள்ளார்.


 


No comments