பரிசுக்காக மருமகனுடன் மோதும் ட்ரம்ப்!


முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பெயரும், அவரது மருமகனும் வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகருமான ஜாரெட் குஷ்னெர் அடுத்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நார்வே நாடாளுமன்ற உறுப்பினரான கிறிஸ்டியன் டைபிரிங் என்பவர் ட்ரம்பின் பெயரை பரிந்துரைக்கும் விண்ணப்பத்தை நோபல் பரிசு வழங்கும் கமிட்டியிடம் வழங்கியுள்ளார்.

இஸ்ரேல்-ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான மோதலில் சுமூக தீர்வு காண உதவியதற்காக ட்ரம்பின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மருமகனும், வெள்ளை மாளிகை மூத்த ஆலோசகருமான ஜாரெட் குஷ்னெரின் பெயர் அமைதிக்கான பரிந்துரை பட்டியில் இடம்பெற்றுள்ளது.

மேற்கு ஆசியாவில் அரபு நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான உறவை சீரமைத்த முயற்சிக்காக ஜாரெட் குஷ்னெரின் முயற்சிக்காக நோபல் பரிசு வழங்கப்பட வேண்டுமென அமெரிக்க அட்டர்னி ஆலன் டெர்ஷோவிட்ஸ் பரிந்துரைத்துள்ளார்.

ஜாரெட் குஷ்னெர் ஹார்வார்டு சட்டக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும் ட்ரம்பின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவருமாவார்.

ட்ரம்ப், குஷ்னருடன் அவரது உதவியாளர் அவி பெர்கோவிட்சின் பெயரும் இந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

No comments