மனித குலத்திற்கு எதிரான நடவடிக்கை! சிரிய உளவு அதிகாரிக்கு சிறைத்தண்டனை வழங்கியது யேர்மனி!


சிரியாவில் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்ததற்காக முன்னாள் சிரிய உளவுத்துறை அதிகாரிக்கு ஜேர்மனி நீதிமன்றம் நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

44 வயதான ஐயாத் அல்-கரிப், 2011 ல் போராட்டக்காரர்களைக் கைது செய்ய உதவியதாகவும் பின்னர் அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என சட்டவாளர்கள் வாதிட்டனர்.

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சி செய்ததாகக் கூறப்படும் மனித குலத்திற்கு எதிரான படுகொலைகளுக்கு சட்டரீதியாக எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை என இதனை கூறுகின்றனர்.

விசாரணைக்கு ​​ஒத்துழைப்பு வழங்காவிட்டால் தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என அவர்கள் சார்பில் சட்டவாளர் வாதிட்டுள்ளார்.

2011 ல் ஜனாதிபதி அசாத்தின் ஆட்சிக்கு எதிராக வெடித்த அமைதியான ஜனநாயக சார்பு போராட்டங்களை நசுக்குவதில் குறித்த புலனாய்வு முகவர் அமைப்பு செயற்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த தண்டனையானது படுகொலைகள் மற்றும் சித்திரவதைகளை அனுபவித்த அல்லது அதனால் பாதிக்கப்பட்ட சிரியர்களுக்கான நீதிக்கான முதல் படி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மற்றொரு சிரியரான 58 வயதுடைய அன்வர் ரஸ்லான் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மேற்குறிப்பிட்ட இருவரும் சிரியாவிலிருந்து வெளியேறி ஜெர்மனியில் தஞ்சம் அடைந்திருந்தனர்.

இவர்கள் 2019 இல் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments