மாற்று வழிகளை தேடிவேண்டியிருக்கும்:அமெரிக்க தூதர்!

 


இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் உள்ளிட்ட விவகாரங்களில் பொறுபற்று செயற்படுமானால் மாற்று வழிகளை தேடவேண்டியிருக்குமென அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணத்தில் சிரேஸ்ட ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில் இறைமையுள்ள மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசென்ற வகையில் பொறுப்புக்கூறலை நிலைநாட்ட உரிய தரப்பு தவறினால் மாற்று வழிகளை சர்வதேசம் தேடவேண்டியிருக்குமெனவும் தெரிவித்தார்.

இந்த கட்டாயம் ஜநா மனித உரிமை கவுன்சிலுக்கு உள்ளதாக தெரிவித்த அவர் மனித உரிமைகளை பேணுவதில் ஜோ பைடனின் அமெரி;க்க அரசு தொடர்ந்தும் முனைப்பு காட்டுமெனவும் தெரிவித்தார்.

இதனிடையே விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரை நான் கொன்றேன்" என்று கோட்டபாய சொன்னதே மனித உரிமை மீறலுக்கான மிகப்பெரும் சாட்சியம் என அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸிடம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார். 

அண்மையில் அம்பாறையில் உகுண பிரதேசத்தில் தலைவர் "பிரபாகரனை நான் கொன்றேன்" என்று  ஜனாதிபதி கோட்டபாய சொன்னதே மனித உரிமை மீறலுக்கான பெரிய சாட்சியம் அதைவைத்தே அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என  அமெரிக்க தூதுவரிடம் சிவஞானம் சிறீதரன் தெரிவித்ததாக தெரியவருகின்றது.

இதனிடையே அமெரிக்க தூதரை பலாலியில் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் சந்தித்து பேசியுள்ளார்.

வுpமான பயணத்திற்காக வந்திருந்த அமெரிக்க தூதர் கொழும்பிலிருந்து யாழ்.வருகை தந்த எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து உரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments