என்றும் வாழ்க தலைவர்


வல்லை மண் தந்த வற்றாத நதியே
நல்ல ஒளி தந்த நற்றமிழ் வளர்மதியே
வல்ல புலி வீரர்களின் வளமிகு தளபதியே
எல்லா மக்களும் போற்றிடும் எங்கள் குணநிதியே

பார்திகழ் பிறந்த பாசமிகு அலையே
கார்த்திகையில் உதித்த கரிகாலன் மலையே
ஊர்திகழ உத்தமரை ஈர்ந்த பெரும் விலையே
ராத்திகமும் இம்மண்ணில் என்றும் எம் நிலையே

எம் மண் மீட்க என்றும் உழைத்தவரே
விண்மீன் போலே எம்மில் நிலைத்தவரே
எம்மினம் மீள எல்லோரையும் அழைத்தவரே
என்றென்றும் வாழ என்றும் வாழ்த்துகிறோம்.

ஆக்கம் - போராளி அன்புக்கரசன்

No comments