நா.உக்களிற்கு ஊசி!பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று (16) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 4 நாட்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை ஏற்றும் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இன்று முதல் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அதன்பிரகாரம் சிறைச்சாலை அதிகாரிகள் 5,100 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.


No comments