திருமலையில் காணாமல் போனோர் மியன்மாரில்!திருகோணமலை துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற நீண்ட நாள் ஆழ்கடல் மீன்பிடிப் படகொன்று காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

‘சாகர குமார 4’ எனப்படும் ஆழ்கடல் மீன்பிடிப் படகே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த படகில் 7 மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளதுடன், மீனவர்களிடமிருந்து கடந்த 12 ஆம் திகதி தொடக்கம் எவ்வித தொடர்புகளும் இல்லை என உறவினர்கள் கூறியுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உதித கம்ஹேவாவிடம் வினவியமைக்கு, மியன்மார் கடற்பரப்பில் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் குறித்த படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக கூறினார்.

மியன்மாரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலமையினால் இது தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments