வடக்கில் தமிழுமில்லை! சிங்களமுமில்லை!



இலங்கையின் 73ஆவது சுதந்திர தினமான இன்று வியாழக்கிழமை வடக்கு மாகாணம் வழமை போன்றதொரு நாளாக கடந்து போயிருந்தது.ஆட்களற்ற சடங்காக இலங்கை சுதந்திர நிகழ்வு பிசுபிசுத்துப்போயிருந்தது.

சுதந்திர தின நிகழ்வுகள் அரச அலுவலகங்களில் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலான அரச உத்தியோகத்தர்கள் சுதந்திர தின நிகழ்வை புறக்கணித்திருந்தர்.

சுதந்திரதின நிகழ்வில் அனைவரையும் கட்டாயம் பங்கெடுக்க வேண்டுமென அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் வெறும் 30 பேர் மட்டும் பங்கெடுத்த நிகழ்வாக சுதந்திரதின நிகழ்வு நடந்துள்ளது.

இதனிடையே சிங்களத்திலே இம்முறை தேசிய கீதம் இசைக்கப்படவேண்டுமென்ற அறிவிப்பின் மத்தியில் வடமாகாணசபை தலைமையகமோ சிங்களமுமின்றி தமிழுமின்றி வெறும் இசைக்கலவையுடன் தேசிய கீத விவகாரத்தை முடித்துக்கொண்டதாக தெரியவருகின்றது.


No comments