இந்தியா மௌனம்:காத்திருக்கிறது இலங்கை!


ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆதரவு கோரிய இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா இன்னும் முறையாக பதிலளிக்கவில்லையென இலங்கையின் வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளதுடன் இலங்கை இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

ஜெனிவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கை இந்தியாவின் ஆதரவைக் கோரியது என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், இந்த கோரிக்கைக்கு இந்தியா இன்னும் முறையாக பதிலளிக்கவில்லை என்று கொலம்பகே குறிப்பிட்டார்.

இதனிடையே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது அமர்வானது சுவிற்ஸர்லாந்தின் ஜெனீவாவில் நேற்று (22) ஆரம்பமானது. இதன் ஆரம்ப உரையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நிகழ்த்தினார். எனினும், அவரது உரையில் இலங்கை குறித்து எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. 

இதேவேளை, இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை, 24ஆம் திகதி புதன்கிழமை  விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.


No comments