அடை மழை: திருக்கோவில் நோக்கி நகர்கிறது!

 தடைகளை உடைத்து தமிழர் தேசம் நடைபயணத்தினை ஆரம்பித்துள்ள நிலையில் பொத்துவிலில் வீதி தடைகளை உருவாக்கி தடுத்து நிறுத்த அரசு முற்பட்டுள்ளது.

ஆயினும் தடைகளை தூக்கி வீசி பேரணி நகர்ந்திருந்த நிலையில் தற்போது அது வாகன பேரணியாக திருக்கோவில் நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது.

திருக்கோவிலில் தொடர் போராட்டத்தில் குதித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தினை இணைத்துக்கொண்டு பேரணி நகருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச அடக்குமுறைகளை தாண்டி கொட்டும் மழைக்கு மத்தியில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பயணம் ஆரம்பித்துள்ள நிலையில் தடைகளை போராட்டகாரர்கள் தூக்கியடித்து நகர்வது அரசுக்கு அச்சத்தை தோற்றுவித்துள்ளது..


No comments