தடையினை காண்பித்து தடுக்க முயற்சி!



பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தை நீதிமன்ற தடையை காண்பித்து தடுத்து நிறுத்த இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மீது தடையினை காரணங்காட்டி பேரணியை தடுக்க முயற்சிகள் தொடர்கின்றன. 



இதேவேளை நீதிமன்றக் கட்டளைகளைக் கொண்டு எமது போராட்டத்தைத் தவிர்க்க முடியாது என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


பேரணி சிறுபான்மையினரின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது, மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தியுள்ளது.



இதேவேளை பொத்துவில் முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு இராணுவ வலயமாக பொத்துவில் நகர் மாற்றப்பட்டுள்ளது. பொத்துவிலிற்கு செல்லும் வீதிகளிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, சோதனைச்சாவடியை கடப்பவர்கள் வழிமறிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம் பெறுகிறன.


இந்த நாட்டில் எத்தனையோ போராட்டங்கள், நிகழ்வுகள், ஏன் அரசின் நிகழ்வுகள் கூட கொரோனாவின் மத்தியில் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


ஆனால் தமிழ் மக்கள் தங்கள் உரிமை தொடர்பான விடயங்களுக்காகப் போராட்டம் நடத்தும் போது மாத்திரம் கொரோனாவும், நீதிமன்ற உத்தரவுகளும் வருகின்றன. இது தான் இந்த நாட்டின் தலைவரின் ஒரே நாடு ஒரே சட்டமா என கேள்வி எழுந்துள்ளது.


No comments