சித்தர்,கஜேந்திரகுமாரிடமும் வாக்குமூலம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் பங்கேற்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனிடமும் இலங்கை காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள தமிழீழழ மக்கள் விடுதலைக்கழக் அலுவலகத்திற்கு சென்ற கிளிநொச்சி, பருத்தித்துறை காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறையினர் தனித்தனியாக அவரை விசாரித்து வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

காலை 9.30 தொடக்கம் மதியம் ஒரு மணி வரை சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை இடம்பெற்றுள்ளது.

இதனிடையே தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலமிடமும் இலங்கை காவல்துறை வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாக கட்சி அறிவித்துள்ளது. 

ஏற்கனவே கொழும்பிலும் மட்டக்களப்பிலலும் வாக்குமூலங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments