மருத்துவ நிபுணருக்கும் கொரோனா!யாழ். போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ நிபுணர் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற பரிசோதனையிலேயே அவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர் கொழும்பு சென்று திரும்பிய நிலையில், தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதாக தாமே முன்வந்து; பரிசோதனையை முன்னெடுத்ததாக தெரியவருகின்றது.

இதனிடையே யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மானிப்பாய் காவல் நிலைய உத்தியோகத்தர்கள் ஆறு பேர் சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


அத்துடன், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் உள்ள சந்தேகநபர்கள் எவரும் இன்று நீதிமன்றங்களுக்கு அழைத்துச் செல்லப்படவில்லை.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதி ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கடந்த 11ஆம் திகதி சங்குவேலியில் வைத்து மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர் 12ஆம் திகதி முதல் மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


No comments