தமிழ் நா.உறுப்பினர்கள்இராணுவ வைத்தியசாலை செல்வரா?பாராளுமன்ற உறுப்பினர்களிற்கான கொரோனா தடுப்பூசிகள் இராணுவ வைத்தியசாலையில் வைத்து போடப்பட்டுவருகின்ற நிலையில் கடும் தமிழ் தேசியவாதிகளான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்குபற்றுவார்களாவென்ற கேள்வி எழுந்துள்ளது.

நேற்றைய தினம் 19 பேர் இன்றையதினம் கொவிட்-19 தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இராணுவ வைத்தியசாலையில் வைத்தே தடுப்பூசியை ஏற்றிக்கொண்டனர்.


இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷா நானாயக்கரா, அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே ஆகியோர் தடுப்பூசி பெறுவதைத் தவிர்த்துக்கொண்டுள்ளனர்.


இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, தடுப்பூசியை பெற்றுக்கொண்டார்.

இன்றும் ஊசி போடும் பணிகள் தொடரவுள்ளது.


No comments