வாழும் வீரர்,பொப்பி மலர் நாயகன் இலங்கையை புறக்கணித்தனர்!

இலங்கையின் சுதந்திர தினத்தை பொப்பி மலர் நாயகன் சுமந்திரன் முதல் வாழும் வீரர் இரா.சம்பந்தன் எனன கூட்டமைப்பினர் இம்முறை புறக்கணித்துள்ளனர்.

73ஆவது சுதந்திர தினத்தின் பிரதான வைபவம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றிருந்தது.

இதில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்றுள்ளார். அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான திஸ்ஸ அத்தநாயக்க, கபீர் ஹாசிம் உள்ளிட்டோர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதேவேளை,முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஆயினும் கூட்டமைப்பின் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரும் முதல் முறையாக அந்த பக்கம் எட்டிக்கூட பார்த்திருக்கவில்லை.


No comments