கொரோனா ஊசி சர்ச்சை!இலங்கையில் அரசியல் செல்வாக்கில் கொரோனா தடுப்பூசி போடுவது சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்  சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உட்பட  அவரது அலுவலக ஊழியர்கள், இன்று(18) கொரோனா  தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் வைத்தே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே சனத் ஜெயசூரிய தனக்கும் தனது பிள்ளைகளிற்கும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இதனிடையே படைமுகாம்களில் தடுப்பூசி போடப்படுவதை  தமிழ் தேசிய மக்கள் முன்னணி மறுதலித்துள்ளது.


No comments