டெலோவும் ஆதரவு?


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான வடகிழக்கு சிவில் அமைப்புக்களின் போராட்டத்திற்கு ரெலோ பூரண ஆதரவை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில்           பொத்துவிலில் தொடங்கி பொலிகண்டி வரை நடைபெறவுள்ள வடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள தமிழின ஒடுக்குமுறைக்கு எதிரான ஐனநாயகப் போராட்டத்திற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ ) எமது முழுமையான பூரண ஆதரவை தெரிவிக்கின்றோம்.

      தமிழ் மக்களின் இன விடுதலைக்காக தொடர்ச்சியாக ஐனநாயக முறையில் போராடி வரும் எமது கட்சி அண்மைக் காலங்களில் கூர்மையடைந்துள்ள தமிழின அழிப்பை தடுத்து நிறுத்த பல இடங்களிலும் களத்தில் நின்று குரல் கொடுப்பதுடன் சர்வதேச ரீதியாகவும் இலங்கை அரசாங்கத்தின் அட்டூழியங்களை மனித உரிமைகள் சார்பான அமைப்புக்களுக்கும்,மனிதவுரிமைகளை பாதுகாக்கும் நாடுகளுக்கும் அறிக்கை இட்டு அழுத்தங்களை இயன்ற வரை பிரயோகித்து வருகின்றோம். இச் செயற்பாடு தமிழர் தாயகப் பகுதியின் எட்டு மாவட்டங்களிலும் தொடர்ந்து எம்மால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 இதன் தொடர்ச்சியாக வடகிழக்கு இணைந்த ஒரு ஐனநாயகப் போராட்டத்தை சிவில் அமைப்புக்கள் ஏற்பாடு செய்துள்ளமையை நாம் வரவேற்கின்றோம் அது மட்டுமல்ல எமது பூரண ஆதரவையும் தெரிவிக்கின்றோம் அத்துடன் இந்த ஐனநாயகப் போராட்டத்தில் தமிழர் தாயகத்தில் உள்ள அனைத்து தமிழ்த் தேசியம் சார்ந்த அமைப்புக்களையும் தமிழ் பேசும் முஸ்லிம் அமைப்புக்களையும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments