கின்னஸ் சாதனையில் இலங்கை காவல்துறை!பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியில் பங்கெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பலரிடமும் ஒரே நாளில் வாக்குமூலங்களை பதிந்து சாதனை செய்துள்ளது இலங்கை காவல்துறை.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடம் வடக்கு – கிழக்கில் உள்ள எட்டு காவல் நிலையங்களைச் சேர்ந்த காவல்துறையினரால் இன்று வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

வடக்கில் வல்வெட்டித்துறை, கிளிநொச்சி, மாங்குளம் ஆகிய காவல் நிலையங்களில் இருந்தும் கிழக்கில் வாழைச்சேனை, மூதூர், காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை ஆகிய காவல் நிலையங்களில் இருந்து சென்ற காவல்; உத்தியோகத்தர்கள் சாணக்கியனிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர்களானன சி.சிறீதரன்,செல்வம் அடைக்கலநாதன்,யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் என பலரது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.


No comments