மடை மாற்ற வேண்டாம்!இது தனிநபர்களின் போராட்டமல்ல இதற்கு யாரும் உரிமை கோர முடியாது. இது மக்களின் எழுச்சி, மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ள போராட்டம். சில்லறை விடயங்களிற்காக அதை திசைமாற்ற முடியாது.

அதில் அணிதிரண்ட இளைஞர்களிற்கு சரியான வழிகாட்ட வேண்டிய பொறுப்பு அரசியல் கட்சிகள் மத தலைவர்கள் மற்றும் சிவில் சமூகத்திற்கு உள்ளது என தெரிவித்துள்ளார் அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சியில் தடைகள் வந்த போது பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டார்கள் என வடக்கு கிழக்கு சிவில் சமூக இணைத்தலைவர் ச.சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ச.சிவயோகநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் எந்த சமூகத்திலும் முன்னிலைப்படுத்தப்படும் வழிகாட்டுபவர்கள் சமயத்தலைவர்கள். அதனால்தான் மத தலைவர்களை முன்னிலைப்படுத்தி பேரணியை ஏற்படுத்தினோம்.


சில தடைகள் வந்த போது பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் நின்று செயற்பட்டனர்.


இறுதிக்கட்டத்தில் ஒரு இலட்சம் வரையான மக்கள் திரண்டிருப்பார்கள். அதிகளவான மக்கள் வந்திருந்தாலும் விபத்து மற்ற சமூகங்களுடனான குரோதங்களோ இல்லாமல் அமைதியாக முடிந்தது. பல கட்சிகள் பல சமயங்கள் பல குழுக்கள் ஒன்றிணைந்து இறுதி வரை ஒற்றுமையாக இதனை முடித்தார்கள். ஒவ்வொரு பகுதிகளிலும் வந்த கலந்து கொண்டவர்களையும் சேர்த்தால் 4,5 இலட்சம் மக்கள் இணைந்திருப்பார்கள் என தெரிவித்துள்ளார்.


 பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி போராட்டத்தை சில்லறை விடயங்களிற்காக திசைமாற்ற முடியாது என அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் தெரிவித்துள்ளார்.


இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
No comments