முல்லைதீவை வந்தடைந்தது பேரணி!


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் பேரணி முல்லைதீவை வந்தடைந்துள்ளது.உணர்வுபூர்வமான மக்கள் பங்களிப்புடன் இளைஞர்கள் பாதுகாப்பு வழங்கி வர பேரணி முள்ளிவாய்க்கால் பகுதி நோக்கி நகர்ந்துள்ளது.

முல்லைதீவில் வைத்து முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார்.

ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கின்ற செம்மலை ஆலயத்தையும் பேரணி சென்றடைந்திருந்தது.

மத தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் முன்னணி வகிக்க பேரணி நகர்ந்துவருகின்றது.


No comments