மார்ச் 7 வரை ஜெர்மனியில் மீண்டும் முடக்க நிலை நீடிப்பு!


கொரோன வைரஸின் பரவல் பாதிப்பால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஜெர்மன் ஏற்கனவே முடக்க நிலையில் இருக்கின்றபோதும் அந்நாட்டு 16 மாநிலங்களின் தலைவர்களும் மத்திய அரசும் பணிநிறுத்த நடவடிக்கைகளை குறைந்தது மார்ச் 7 வரை நீட்டிக்க ஒப்புக் கொண்டுள்ளனர். 

இருப்பினும் மார்ச் 3 தேதியளவில்  பள்ளிகளும் சிகையலங்கார நிலையங்களும்   திறக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

நடைமுறையில் இருக்கும் முடக்க நிலை  நவம்பரில் தொடங்கி மற்றும் கிறிஸ்மஸுக்கு முன்னர் நீட்டிக்கப்பட்டு நடைமுறைகள்  கடுமையாக்கப்பட்டது, 

COVID-19 நோயாளிகளின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் குறைந்து வருவதாகவும் செவ்வாயன்று வெளியான அறிக்கையில், தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் ஜெர்மனி முன்னேற்றம் கண்டதாகக் கூறப்படுகிறது.

No comments