மன்னாரில் மீனவரை காணோம்?வவுனியா- செட்டிக்குளம் முசல்குத்தி காட்டுப்பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கி சூட்டினில் முதலியார்குளம் பகுதியைச் சேர்ந்த அன்ரனி ஜெறின் (வயது- 36) என்ற நபரே படுகாயமடைந்துள்ளார்.

இலங்கை படையினரே துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ள போதும் இலங்கை காவல்துறை அதனை மறுதலித்துள்ளது.

இதனிடையே மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் கடற்தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இன்று வரை கரை திரும்பவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் கொண்னையன் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கொட்வின் வயது-38 மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆர்.கண்ணன் வயது-55, எஸ்.பாண்டியன் வயது-23 ஆகிய மூன்று மீனவர்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிய வருகின்றது.


No comments