மேலும் 32பேருக்கு தடை:றிசாத் ஆதரவு!

 


பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நடைபயண போராட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனுக்கும் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

இலங்கை காவல்துறையால்; தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின் பிரகாரம், திருக்கோவில் பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

குறித்த அறிவிப்புக்கள் சிவில் அமைப்பினர் ,தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட 32 பேருக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கண்டித்து நாளை  முதல் இடம்பெறவுள்ள, நடைபயணத்துக்கும் ஆதரவு தருமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுபான்மையினர் என்ற வகையில், முஸ்லிம் சமூகமும் இந்த நெருக்கடிகளை எதிர்கொள்கின்றது.

எனவே எமது சகோதர சமூகம் ஏற்பாடு செய்துள்ள இந்த நடைபவனிக்கு, முஸ்லிம் சமூகமும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வேண்டுகோள் விடுக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments