விடுதலை செய்யுங்கள்! வவுனியாவில் ஆர்பாட்டம்!


அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யவும், முஸ்லிம்களின் சடலத்தை அடக்கம் செய்ய அனுமி கோரியும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால் போராட்டமொன்று இன்று (2) முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் முக்கியஸ்தர்களான நி.பிரதீபன், டொன்பொஸ்கோ, கட்சி உறுப்பினர்கள், ஈ.பீ.ஆர்.எல்.எப். மத்தியகுழு உறுப்பினர்களான கே.அருந்தவராயா, ரேகன், புதிய அரச பொது ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘அரசியல்கைதிகளிற்கு மன்னிபே கிடையாதா’, ‘கைதிகளை விடுதலைசெய்’, ‘முஸ்லிம்களின் ஜனாசாக்களை எரிக்காதே’, ‘காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டங்களிற்கு பதில் என்ன’ ஆகிய கோஷங்களை எழுப்பியிருந்ததுடன், பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

No comments