பார்ட்டிக்கு வரவில்லை:வெளியே போ?கூட்டமைப்பு வசமுள்ள கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் வருட இறுதி கொண்டாடத்திற்கு வருகை தராத பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க மேற்கொண்ட முயற்சி விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

வெளிவாரியாக கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஆட்;சேர்ப்பு செய்து ஆதன வரி கடமைகளில் ஈடுப்பட்டு வந்த 7 பெண் பணியாளர்களை கரைச்சி பிரதேச சபை தவிசாளர் பணி இடைநிறுத்தம் செய்துள்ளார்.

கரைச்சி பிரதேச சபையின் வருட இறுதி கொண்டாட்டம் கடந்த வாரம் பரந்தன் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் களியாட்டமாக இடம்பெற்றது.

கொரோனா பரவலுக்குள் பல்வேறு மறுப்புக்கள் எழுந்தபோதும் தவிசாளர் விடாப்பிடியாக குறித்த களியாட்ட நிகழ்வை அரங்கேற்றியுள்ளார்.

எனவே இங்கு இடம்பெற்ற கொண்டாட்டத்திற்கு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அனுப்பவில்லை. எனவே மறுநாள் கடமைக்கு திருப்பிய போது அவர்களை அழைத்த தவிசாளர் பணி இடைநிறுத்தும் உத்தரவை வாய்மொழி மூலம் வழங்கியுள்ளார்.


No comments