முறைப்படி பதவி மாற்றத்தைச் செய்யாது வெளியேறிய டிரம்ப்! பதவியேற்ற ஜோ பிடனும் ஹரீஸும்

அமெரிக்க வரலாற்றில் மிகவும் வியத்தகு அரசியல் மாற்றங்களில் ஒன்றான ஜோ பிடன் 46 வது அமெரிக்க அதிபராக இன்று பதவியேற்றார்.

தலைமை நீதிபதி ஜோன் ரொபர்ட்ஸிடமிருந்து பதவியேற்ற பின்னர் "ஜனநாயகம் நிலவியது" என்று அவர் கூறினார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமொிக்க அதிபர் பிடனுக்கு முறைப்படி பதவி மாற்றத்தை வழங்காது வெளியேறிய அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

ட்ரம்பின் முக்கிய கொள்கைகளை மாற்றியமைக்கும் நோக்கில் புதிய அதிபர் நிறைவேற்று ஆணைகளை அறிவித்துள்ளார்.

துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாரிஸ் பிடனுக்கு முன்னிலையில் பதவியேற்றார்.

பதவியேற்பு நிகழ்வு அமெரிக்க கேபிட்டலில் நடைபெற்றது. சனவரி 6 ஆம் திகதி அதிபர் டிரம்ப் சார்பு ஆர்ப்பாட்டக்காரர்களால் கட்டிடத்தை தாக்கி பயங்கர கலவரத்தில் வன்முறையில் ஈடுபட்டடிருந்தனர். இச்சம்பவத்தை அடுத்து வாசிங்டன் டிசி கடுமையான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்ப அதிகரிகக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு படையினர், காவல்துறையினர், புலனாய்வாளர்கள் என 25 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

முன்னாள் அதிபர் டிரம்மும் மெலனி டிரம்பும் உள்ளூர் நேரப்படி 08:00 மணிக்கு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார்கள். அவர்கள் உலங்கு வானூர்தியில் ஏறி அருகிலுள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்திற்கு பறந்து சென்றனர். பின்னர் அங்கிருந்து புளோரிடா போய்ச் சேர்ந்தனர்.

1869 ஆண்டு முதல் அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாத முதல் அதிபர் டொனால் டிரம்ப் என வரலாற்றில் டிரம்ப் பதிசெய்யப்பட்டுள்ளார்.


No comments