சிவயோகநாதனிடம் இலங்கை காவல்துறை விசாரணை ?புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாக தெரிவித்து மட்டக்களப்பு மாவட்டசிவில் சமூக அமைப்புகளின் தலைவர் சிவயோகநாதனிடம் இலங்கை காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது.

மட்டக்களப்பில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற இரண்டு இலங்கை காவல்துறையினர்; சிவில் சமூக அமைப்புகளின் தலைவர் சிவயோக நாதனை விசாரணை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். ஆனால் அவர் வீட்டில் இல்லாத காரணத்தால் அவரை தொலைபேசியில் அழைத்து அவரது அலுவலகத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டம் சார்ந்த மக்கள் பிரச்சினைகளில் முன்நின்று குரல் கொடுத்து வரும் சிவயோகநாதன் அவர்கள் அண்மையில் இலங்கை அரசுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான ஆவணத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்கள் சார்பாக கலந்து கொண்டு கையொப்பம் இடடிருந்தார். 

 

No comments