இலங்கை கடற்படை மோதி இந்திய மீனவர்கள் மரணம்?


இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவிய சமயம் இலங்கை கடற்படையினரின் டோறாவுடன் மோதி உயிரிழந்த   இந்திய மீனவர்களில் இருவரது உடல்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் எடுத்து வரப்படுகின்றது.

இலங்கை கடல் எல்லைப் பரப்பில் திங்கட் கிழமை இரவு மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான ஓர் ட்ரோலர் படகினையும் அதில் பயணித்த நான்கு இந்திய மீனவர்களையும் காணவில்லை என இந்திய மீனவர்கள் தெரிவித்திருந்தனர்.

அதேநேரம் இலங்கை கடற்படையின் கப்பல் ஒன்றுடன் ஓர் விபத்து ஏற்பட்டதில் கடற்படையினரின் ஓர்  கப்பலிற்கு சேதம் ஏற்பட்டு திருத்தப் பணிக்காக சேதமடைந்த கப்பல்  காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.

இவற்றின் அடிப்படையில் இலங்கை கடற்படையினரின் கப்பலில் இந்தியாவில் இருந்து மீன்பிடிக்கப் புறப்பட்டு காணாமல்போன படகே மோதியிருக்கலாம் என்ற  சந்தேகமும்   காணாமல்போன இந்திய மீனவர்  படகில் இருந்த மீனவர்கள் நால்வரிற்கும் என்ன நடந்தது என்ற அச்சம் தொற்றியிருந்தது. 

இவ்வாறு பரபரப்பாக இருந்த விடயத்தில் நான்கு மீனவர்களில்  உயிரிழந்த இருவர் உடலாக கச்சதீவு அருகே மீட்க்கப்பட்டதாக இலங்கை கடற்படை தற்போது அறிவித்துள்ளது. இதனால் தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் இன்று மதியம் இரு உடல்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் எடுத்து வரப்படுகின்றது.

No comments