பாடசாலைகளை இரு வாரங்கள் திறக்க வேண்டாம் - இங்கிலாந்தில் அழுத்தங்கள் அதிகரிப்பு


இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அதிகமாகப் பரவிவருகின்றது. இதனால் தொடக்கப்பள்ளிகளை இரண்டு வாரங்களுக்கு திறக்க வேண்டாம் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றது.

கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்காக இங்கிலாந்து முழுவதும் பள்ளிகள் இரண்டு வாரங்கள் விடுமுறை விடப்பட்டிருந்தது. நாளை மறுநாள் திங்கட்கிழமை மீண்டும் பள்ளிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில்  அனைத்து பள்ளிகளையும் இரண்டு வாரங்களுக்கு மூடுமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வருகின்றன.

அத்துடன் ஆசிரியர் சங்கங்கள், பள்ளி ஊழியர்கள் மீண்டும் பள்ளிக்குத் திரும்புவது பாதுகாப்பு அற்றது என கூறியுள்ளன. கற்றல் நடவடிக்கைகளை தொலைநிலைக்கற்றல் வகுப்புகள் (காணொளி வழி) முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். 

நேற்று வெள்ளிக்கிழமை லண்டனில் உள்ள பாடசாலைகள் திங்கட்கிழமை திறக்கப்படமாட்டாது என கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் அறிவித்திருந்தார்.

இதேநேரம் லண்டன் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பள்ளிகள் திங்களன்று மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவின் பின்னணியில் உள்ள தகவல்களை வெளியிடுமாறு அமைச்சர்களை கட்டாயப்படுத்த தலைமை ஆசிரியர்கள் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளனர்.

No comments