நோர்வே நிலச்சரிவு! மீட்கப்பட்டது 3வது உடலம்


நோர்வேயில் ஏற்பட்ட நிலச்சரிவின் பின்னர் மூன்றாவது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஒஸ்லோவுக்கு அருகிலுள்ள அஸ்க் கிராமத்தில் இந்த நிலச்சரிவு கடந்த புதன்கிழமை ஏற்பட்டிருந்தது. இதில் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.

இன்று சனிக்கிழமை கட்டிட இடிபாட்டுக்குள் இருந்து இருவரின் உடலங்களை மீட்புக்குழு மீட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை முதலாவது நபர் சடலமாக மீட்கப்பட்டார். ஒரு நாய் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

No comments