பிரித்தானியாவில் ஒரு நாளில் மட்டும் 1041 பேர் பலி!


பிரித்தானியாவில் உருமாறிய வீரியமிக்க கொரோனா தொற்று நோயினால் ஒரு நாளில் (நேற்றுப் புதன்கிழமை) மட்டும் 1041 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன்

62,322 பேர் தொற்று நோய்க்கு உள்ளாகியுள்ளனர்.

இங்கிலாந்து மருத்துவமனைகளில் 30,074 கோவிட் நோயாளிகள் உள்ளனர். தொற்று நோயாளிகள் எண்ணிக்கை கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகரித்துள்ளது. மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்து வர முடியாமல் ஆம்புலன்ஸ் சேவை திணறி வருகின்றது.

அடுத்த சில வாரங்களுக்கு இறப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் எதிர்பாக்கப்படுகின்றது.

No comments