திருகோணமலையில் வீதியோர மீன் வியாபாரிகள் போராட்டம்!

திருகோணமலை கண்டி வீதியில் மட்டிக்களி மீன் வியாபாரிகள் தமது வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில்

ஈடுபட்டனர். இப்போராட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

தமது வியாபாரத்தை நகர சபை தடைசெய்ததால் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி உள்ளோம். மூன்று வருடங்களாக இந்த வீதி ஓரத்தில் நாம் வியாபாரம் செய்து வருகின்றோம்.

நாம் வருமானம் இன்றிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். எமக்கு வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். அல்லது பொருத்தமான இடத்தை ஒதுக்கித்தர வேண்டும். எமது குடும்பம் நடுத்தெருவில் நிற்க முடியாது எனத்தெரிவித்தே இதில் ஈடுபட்டனர்.

குறித்த வியாபாரிகளிடம் இருந்து நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் மற்றும் 150 ரூபாய் பணம் நகர சபையால் வசூலிக்கப்பட்டு, அவர்களுக்கு பற்றுச்சீட்டும் வழங்கப்பட்டன.

இந்நிலையில், திடீரென்று நகர சபையால் முன்னெடுக்கப்பட்ட மேற்படி நடவடிக்கையின் காரணமாக தாம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.


No comments