முல்லையில் விற்பனைக்கு புத்தர் சிலை?


முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புத்தர் சிலையை நிறுவ ஒருபுறம் முயற்சிகள் நடக்க இன்னொருபுறம் முல்லைதீவு நகர்ப்பகுதியில், பெறுமதியான புத்தர் சிலையை, வியாபாரத்துக்காக விற்பனை செய்ய முயன்ற ஹட்டனைச் சேர்ந்த மூவரை, சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

தென்பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்கள், பேஸ்புக் ஊடாக 06 கிலோகிராம் எடையுடைய, வெண்கல புத்தர் சிலையை, தங்கச் சிலை என்று கூறி,  முல்லைத்தீவுக்கு கொண்டு வந்து, விற்பனை செய்ய முயன்றுள்ளனர்.

இந்நிலையிலேயே, சிறப்பு அதிரடிப்படையினரால் இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments