நிலாவரை வந்த தொல்லியல் ஆய்வு?

 யாழ்.நிலாவரையில் நிலத்துக்கு அடியில் புராதன கட்டடம் இருப்பதாக தெரிவித்து இன்று மதியம் முதல் திடீரென தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தகவலறிந்து சென்றிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் வலி.கிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோஸ் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று தடுத்து தமது எதிர்ப்பினை பதிவு செய்துவருகின்றனர்.

ஏற்கனவே முல்லைதீவு குருந்தூர் மலை,கொக்கிளாய் மற்றும் கிளிநொச்சி சிவன் கோவில் என தொடரும் அகழ்வராய்ச்சி  தற்போது நிலாவரையினை வந்தடைந்துள்ளது.


No comments