தமிழ்நாட்டில் பிரச்சினை! தூபிக்கு அடிக்கல் நாட்டு!! விளக்குகிறார் துணைவேந்தர்


யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த தூபி இடித்து அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பதற்றம் மற்றும் போராட்டங்களால் எழுந்த பதற்ற சூழலை சுமூகமான முறையில் தீர்த்து வைக்குமாறு அரசாங்கம் கூறியுள்ளதாக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் தூபி அழிக்கப்பட்ட இடத்தில் இன்று அடிக்கல் நாட்டிவிட்டு காவல்துறை அதிகாரியுடன் விளக்கம் அளிக்கும் போதே இக்கருத்தை அவர் வெளியிட்டுள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கும் போது:-

தூபி இடிப்புக்கு எதிராக எழுந்த தற்போதைய சூழலை சுமூகமாக கையாளுமாறு அரசாங்கத்திடம் இருந்து கட்டளை வந்துள்ளது. இச்சூழல் குறித்து பல்கலைக்கழ மாநியத்திற்கு எழுத்துமூலம் அறிவித்திருந்தேன்.

அத்துடன் தமிழ்நாட்டில் நிறையப் பிரச்சினை.  இந்திய தூதரகத்திற்குப் போகினேன். இது சரியாக ஒழுங்குமுறையுடன் தான் இந்த அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைபெறுகிறது. இன்றைக்கு இரண்டு கல்லு வைத்து அடிக்கல் நாட்டு நிகழ்வு நடைபெற்றுள்ளது.

மாணவர்களை சாந்தப்படுத்தி அவர்களின் கோரிக்கைகளை ஏற்று அதை அடையாளப்படுத்துவது. கட்டிடம் ஒன்றும் இல்லை. என்னுடைய மாணவர்கள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இருக்கிறார்கள் நன்றி வணக்கம் என்றார்.


No comments