இந்தியா இலங்கைக்கு அயல் நாடுமட்டுமல்ல. நட்புநாடும் கூட!!


பொதுவான காரணிகளை கொண்டதாக இச்சந்திப்பு காணப்பட்டது. இலங்கைக்கும்  இந்தியாவுக்கும் இடையிலான நற்புறவு  வரலாற்று ரீதியான

தன்மைகளை கொண்டுள்ளது. பல நெருக்கடியான சூழ்நிலையில் இந்நியா இலங்கைக்கு சார்பாக செயற்பட்டுள்ளது.

இந்தியா இலங்கைக்கு அயல் நாடுமட்டுமல்ல. நட்புநாடும் கூட என்பதை பல சந்தர்ப்பங்களில் நினைவுப்படுத்தியுள்ளோம். இரு நாடுகளின் நட்புறவை வலுப்படுத்துவது அவசியமாகும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும் இரு நாடுகளும் இணக்கமாக செயற்படுவது அவசியம் என பிரதமர் இதன் போது குறிப்பிட்டார்.

இலங்கையுடனான நட்புறவைதொடர்ந்து பேணுவது அவசியமானதொன்றாகும். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து மீள ஒத்துழைப்பு வழங்கப்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரதமரிடம் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீறிஸ்,  இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

No comments