அரசியல் கைதிகளிற்காக திரண்ட மத தலைவர்கள்!


தமிழ் அரசியல் கைதிகளை கருணை அடிப்படையிலாவது விடுவிக்க வலியுறுத்தும் கருணை மனுவிற்கு ஆதரவு தெரிவித்து சர்வமதத்தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்.நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அனைத்து மதத்தலைவர்களும் இணைந்து கையொப்பமிட்டுள்ளனர்.

இதனிடையே அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்டு இலங்கையின் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் உறவினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 236 பேர் இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளர்.அத்துடன் 107 பேர் விடுதலைப் புலிகள் என்ற சந்தேத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனனர்.


No comments