வெளியே வந்தார் சசிகலா?சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு அ.தி.மு.க. முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு – பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு இன்றுடன் சிறைத் தண்டனைக் காலம் முடிவடைந்தது.

சசிகலா சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு சென்ற சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் கையெழுத்து பெற்று விடுதலையை அறிவித்துள்ளனர்.

No comments