நிர்க்கதியாக தொழிலாளர்கள்:முழுவதாக திறக்க உத்தரவு?


சுமார் 65ஆயிரம் இலங்கை தொழிலாளர்கள் அரேபிய நாடுகளில் நிர்க்கதியாக உள்ள நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காகவும் ஜனவரி 22ஆம் திகதி தொடக்கம் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் அவதானம் செலுத்தி சுகாதார பிரிவுகளின் விசேட கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

ஜனவரி 22ஆம் திகதியின் பின்னர் நாட்டிற்கு வருவதற்கு அனைத்து வர்த்தக விமானங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

No comments