கோத்தா கலைக்கமாட்டார்?மாகாணசபை முறைமையினை நீக்குவது தொடர்பாக அண்மையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் யாருமே கருத்துக்களை முன்வைக்கவில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கான காலச் சூழல் பற்றிக் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

“பெரும்பான்மை மக்களின் ஆதரவினால் உருவாக்கப்பட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தில் பல்வேறு கருத்துக்களை கொண்டோர் இருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் தமது அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால், மாகாண சபை முறை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் வெளியாகின்ற போதிலும், அதனை இல்லாமல் செய்வது தொடர்பாக அரசாங்கத்திற்கு எந்த திட்டமும் இதுவரை இல்லை.

அண்மையில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டம் இடம்பெற்றது. அதில் மாகாண சபை முறைமைக்கு எதிரான அரசியல் கருத்துக்களை கொண்டோரும் இருந்தனர். குறித்த கூட்டத்தில் மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.

இதன்போது, குறித்த தேர்தலை நடத்துவதற்கான காலச்சூழல் பற்றி பிரஸ்தாபிக்கப்பட்டதே தவிர, மாகாணசபை முறையை நீக்கக்கூடாது என்று யாரும் கூறவே இல்லை எனவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.No comments