கச்சதீவு சந்தேகம்?


இவ்வருட கச்சதீவு ஆலய உற்சவத்தினை சுகாதார அமைச்சின் அனுமதியுடன் நடத்துவதாக இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இதனிடையே யாழ். மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள சந்தைகளை தற்போதைய நிலைமையில் மீளத் திறப்பது சாத்தியமற்றது என யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருமண மண்டபங்களில் திருமணங்கள் நிகழ்வுகள் பிறந்தநாள் நிகழ்வுகள் நடத்த தடை எனினும் 50 பேருக்குட்பட்ட கூட்டங்கள் ஏனைய செயற்பாடுகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அத்தோடு ஆலயங்கள் மற்றும் பொது இடங்களிலும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்றவாறு செயற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


No comments