கோப்பாயை தொடர்ந்து வட்டுக்கோட்டை?





கோப்பாய் கல்வியியல் கல்லூரியை தொடர்ந்து வட்டுக்கோட்டை  தொழில்நுட்ப கல்லூரியை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் கொரோனா அவசர நிலை ஏற்படும் போது வட்டுக்கோட்டை   தொழில்நுட்ப கல்லூரியினை கொரோனா அவசர நிலைக்கு பயன்படுத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கேதுவாக குறித்த தொழில்நுட்பக்கல்லூரியினை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி கையகப்படுத்தவுள்ளதாக யாழ் மாவட்ட கொரோனா ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் செனரத் பண்டார என்பவர்  தெரிவித்துள்ளாh.;

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரி தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெறும் கொரோனா தடுப்பு தொடர்பில் ஆராயும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றிருந்தது.

கொரோனா கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி வடக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர், யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ராணுவ உயர் அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுகாதாரப் பிரிவினர் கலந்துகொண்டனர்.


No comments