கோடி சொத்துக்களை பாதுகாக்க சதியா?தங்கள் சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ளவோ அல்லது சொத்துக்களை சேர்த்துக்கொள்ளவோ தமிழ் மக்களை பகடைக்காய்களாக மாற்றவேண்டாமென கோரிக்கை விடுத்துள்ளார் தமிழீழ விடுதலை இயக்க முக்கியஸ்தரும் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் தமிழ் தலைவர்கள் ஒற்றுமையாக தீர்மானமொன்றை எடுத்து ஜநாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய சந்தரப்பமிது.

ஆனாலும் பெரும்பான்மை மத்தியஸ்தத்தில் தமிழ் தலைமைகள் பேச்சு மேசையில் அமர்வது மிக கேவலமானது.

அதுவும் கடந்த ஆறு வருடங்கள் ஜநாவில் இலங்கைக்கு கால அவகாசம் பெற்றுத்தந்தவர்கள் தலைமையில் தமிழ் தலைவர்கள் ஒன்று கூடி கொழும்பில் ஆராய்கிறார்களாம்.

நிமல்கா பெர்னான்டோ மற்றும் பாக்கிய சோதி சரவணமுத்து போன்றவர்கள் ஜநாவில் என்ன செய்தார்கள் என்பது தமிழ் மக்களிற்கு நன்கு தெரியும்.

ஆளாளுக்கு தமிழ் தரப்புகள் தனித்தனியாக ஜநா விடயத்தை கையாள்வது நிச்சயம் தமிழ் மக்களது அவலங்களை கூறுபோடும் நடவடிக்கையாகும்.

அது எமது கோரிக்கையினை மலினப்படுத்துகின்றது.

காணாமல் போனோர் விடயத்திற்கு தீர்வில்லை.அரசியல் கைதிகள் சிறைகளிலேயே அடக்கப்பட்டுள்ளனர்.சிங்கள குடியேற்றங்கள்,விகாரைகள் அமைப்பு,பௌத்த மயமாக்கல் என  தமிழ் தேசம் மோசமான கட்டத்தை அடைந்து வருகின்றது.

இந்நிலையில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் எனப்படுவோர் தங்கள் கோn கோடியாக உள்ள சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ளவோ அல்லது சொத்துக்களை சேர்த்துக்கொள்ளவோ தமிழ் மக்களை பகடைக்காய்களாக மாற்ற சதிகளில் ஈடுபடக்கூடாது.அதே போன்றே இலங்கையினை ஜநாவிலிருந்து வெளியேற்றி பாதுகாக்கவும் மக்களை ஏமாற்றிய முயலக்கூடாது.

அதிலும் ஆளாளுக்கு தனித்து பிரிந்து அறிக்கைகள் விடுவதும் தயாரிப்பதும் மோசமானதெனவும் தெரிவித்தார்.No comments