கொரோனா தொற்று நோயினால் லெப்.கேணல் திலீபனின் சசோதரர் அசோகன் உயிரிழந்தார்


கனடாவில் அஷோகன் ராசையா அவர்கள் கொரோனா தாெற்று நோய்யினால் பாதிக்கப்பட்டு சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார் என செய்திகள்

வெளியாகியுள்ளன. இவர்  தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் சகோதரன் ஆவார்.

மரண அறிவித்தல்

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அசோகன் இராசையா அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நாகலிங்கம்(Master) பர்வதபத்தினி இராசையா தம்பதிகளின் அன்பு மகனும், 

காலஞ்சென்ற சாதுசிகாமணிபிள்ளை குணலஷ்சுமி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும், 

நளாயினி அசோகன் அவர்களின் பாசமிகு கணவரும்,

வருணன், லிலானி ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,

ஷாமினி வருணன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,

இளங்கோ(கனடா), நம்பி(கனடா), காலஞ்சென்ற பார்த்தீபன் (லெப்.கேணல் திலீபன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

மகேஸ்வரி நம்பி(கனடா), பத்மினி(இலங்கை), காலஞ்சென்ற மதிவதணன், சாரோஐனி(இலங்கை), சூரியகுமார்(கனடா), கலாஐனி(இலங்கை), சந்திரகுமார்(கனடா), காலஞ்சென்ற டியூக்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரியன், ஆலியா ஆகியோரின் பாசமுள்ள தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

Mobile : +14168438762 

No comments