நினைவேந்தப்பட்டது தமிழாராச்சி மாநாட்டுப் படுகொலையின் 47 ஆண்டு

1974 சனவரி 10 ஆம் திகதி அன்று தமிழாராய்சி மாநாட்டில் சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு உயிரிழந்த உறவுகளின் 47 ஆண்டு நினைவேந்தல்கள் 

இன்று காலை தமிழாராய்சி மாநாட்டுப் படுகொலை நினைவிடத்தில் நடைபெற்றது. 

நிகழ்வில் உயிரிழந்தவர்களுக்கு  ஆன்மீகத் தலைவர்கள் அரசியல் பிரமுகர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு தீபமேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

மறவன்புலவு சச்சிதானந்தன், யாழ் நகரசபை முதல்வர் மணிவண்ணன், ,மாவைசேனாதிராஜா, சச்சிதானந்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், சீ.வீ.கே சிவஞானம், சிவாஜிலிங்கம், அனந்திசசிதரன், விந்தன் கனகரத்தினம், கஜதீபன் ஆகியோர்  கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றினர்.

No comments